8வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஜெயலலிதா சமீபத்தில் வெளியேற்றினார். இதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஜெயலலிதா பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தான் முழு ஆதரவு தருவதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெயலலிதா நேற்று மாலை மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் பேசியதாகவும் அப்போது அகில இந்திய அளவில் மூன்றாவது அணி அமைப்பது குறித்தும், அதில் எந்தெந்த கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது குறித்தும், இருவரும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. ருப்பினும் அதுகுறித்த முழுமையான விவரங்கள் தெரியவில்லை.

மேற்குவங்கத்தில் இடது சாரிகளுக்கு எதிராக மம்தா பானர்ஜி பல வருடங்களாக அரசியல் நடத்தி வருவதால் ஜெயலலிதா இடது சாரிகளை நிராகரித்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளதாக மேற்குவங்க பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டு உள்ளன.

Leave a Reply