shadow

அம்மாவை மறந்த அதிமுக நிர்வாகிகள். காலண்டர்களில் சசிகலா

வரும் 2017ஆம் ஆண்டு காலண்டர்களில் ஜெயலலிதாவின் படத்தை நீக்கிவிட்டு சசிகலா படத்தை அதிமுக நிர்வாகிகள் ஆர்டர் செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ஜெயலலிதா மறைந்து பத்து நாட்களே ஆகியுள்ள நிலையில் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்பட முக்கியஸ்தர்கள் அனைவரும் சசிகலாவுக்கு ஜால்ரா அடிக்க தொடங்கிவிட்டனர்.

சசிகலாவிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுப்பது, ப்ளக்ஸ் போர்டு வைப்பது என்று ஆரம்பித்துள்ள நிர்வாகிகள் தற்போது 2017ஆம் ஆண்டு காலண்டர்களிலும் சசிகலாவின் படத்திற்கு முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த செயல்கள் அனைத்தும் உண்மையான அதிமுக மற்றும் ஜெயலலிதா விசுவாசுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply