shadow

10தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சில நாட்களாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். தேர்தல் முடிவடைந்ததை ஒட்டி ஓய்வு எடுப்பதற்காக இன்று தனி விமானம் மூலம் அவர்  கோவை புறப்பட்டு சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொடநாடு செல்கிறார்.

கடந்த மார்ச் 3ஆம் தேதியில் இருந்து பாராளுமன்ற தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டினார்.

சென்னையில் இறுதிக்கட்டமாக பிரச்சாரத்தை முடித்த ஜெயலலிதா, கடந்த 24ஆம் தேதி தேர்தலில் ஓட்டு போட்டார். இந்நிலையில் சில நாட்கள் ஓய்வு எடுப்பதற்காக இன்று கொடநாடு செல்கிறார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து இன்று காலை 11.45 மணிக்கு காரில் புறப்பட்ட ஜெயலலிதா, சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் மதியம் 12.15 மணிக்கு தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு செல்கிறார். சில நாட்கள் அங்கு தங்கி, அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை ஜெயலலிதா மேற்கொள்கிறார். வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 16ஆம் தேதிக்கு முன் அவர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply