shadow

8

கடந்த சனிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிறுமி மதுமிதா பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, திங்கள்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பல்லகச்சேரி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மதுமிதா என்ற மூன்று வயது சிறுமி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவரது குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த நிதியுதவிக்கு சிறுமியின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர். சிறுமி மதுமிதாவின் மரணம் அடைந்த சோகம் இன்னும் அந்த கிராமத்தை விட்டு நீங்கவில்லை என்று அங்கு நேரில் சென்று பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply