ஓபிஎஸ்-இடம் குறுக்கு விசாரணை: சசிகலா வழக்கறிஞர் திட்டம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் நேற்று ஓபிஎஸ் ஆஜரான நிலையில் இன்றும் அவர் ஆஜராவார் என்று கூறப்படுகிறது

இன்றைய விசாரணையின்போது சசிகலா வழக்கறிஞர் அவரிடம் குறுக்கு விசாரணை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய விசாரணையில் ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட மருத்துவ உதவி மற்றும் அனைத்துமே சசிகலாவுக்கு மட்டுமே தெரியும் என்றும் தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஓபிஎஸ் கூறியிருந்தார்

இதனையடுத்து அவரிடம் சசிகலா வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்ய இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது