நீட் தேர்வு விலக்கு பெறுவது என்பது சட்டப் பிரச்சினை – ஜெயக்குமார்

நீட் தேர்வு விலக்கு பெறுவது என்பது சட்டப் பிரச்சினை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுக அரசு கையாண்ட மாதிரிதான், திமுக அரசும் நீட் விவகாரத்தை கையாண்டு வருகிறது என்றும், நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவின் இயலாமை வெளிப்பட்டுள்ளது எனெறும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை, சபாநாயகருக்கே ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.