shadow

ஸ்டாலின், ஒபிஎஸ் உடன் கூட்டு சேர்ந்துவிட்டாரா கமல்? ஜெயகுமார்

கமல்ஹாசனின் காட்டமான, நக்கலான நேற்றைய அறிக்கை, சமூக இணையதளங்களில் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த அறிக்கைக்கு நிதி அமைச்சர் ஜெயகுமார் தற்போது பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது:

அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறும் கமல், காவிரி, முல்லைப் பெரியாறு உள்பட எந்த பிரச்சனைக்காவது குரல் கொடுத்திருக்கிறாரா? என்ற கேள்வி எழுப்பியுள்ள ஜெயகுமார், கமல்ஹாசன் எந்த வழக்கு தொடர்ந்தாலும் அந்த வழக்கை சட்டப்படி சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார்.

அதுமட்டுமின்றின் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு கமல் நிரூபித்தால் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார். மு.க. ஸ்டாலின், ஓபிஎஸ் ஆகியோர்களுடன் நடிகர் கமல் கூட்டணி சேர்ந்து ஆட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அமைச்சர் ஜெயகுமார் குற்றஞ்சாட்டினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *