தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ஊழியருக்கு ஜாவா பைக்!

மும்பை வாங்கனி ரயில் நிலையத்தில் சமீபத்தில் ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய மயூர் ஷெல்கே என்ற ஊழியருக்கு ஜாவா நிறுவனம் புதிய பைக் ஒன்றை பரிசாக அளித்து உள்ளது

தன்னுடைய உயிரையும் துச்சமாக கருவியை குழந்தையை காப்பாற்றிய அந்த வீரருக்கு ஏற்கனவே சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகள் பாராட்டுக்களை குவித்தனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் ஜாவா நிறுவனம் ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே அவர்களுக்கு புதிய பைக் ஒன்றை பரிசாக அளிக்க விரும்புவதாக கூறி உடனடியாக பைக்கை அவருடைய வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த தகவல் இணையதளங்களில் பரவி வைரலாகி வருகிறது

Leave a Reply