shadow

ஒரே ஒரு மாணவிக்காக ரயிலை இயக்கி வரும் ஜப்பான் அரசு
japan
ஒரே ஒரு பள்ளி மாணவிக்க்காக ஜப்பானில் ஒரு ரயில் இயங்கி வருகிறது. அந்த மாணவியின் படிப்பு முடிந்தவுடன் அந்த ரயில் நிறுத்தப்படும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

ஜப்பானில் வடக்கு பகுதியில் உள்ள கொசாய்டோ என்ற தீவில் கடந்த சில வருடங்களாக பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில் அந்த ரெயிலில் ஒரே ஒரு பயணி மட்டுமே பயணம் செய்து வருகிறார். அவரும் ஒரு பள்ளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. உயர்நிலைப் பள்ளியில் பள்ளியில் படித்து வரும் அவரை ஏற்றிச் செல்வதற்கும், இறக்கி விடுவதற்கு மட்டும் தினமும் 2 முறை இந்த ரெயில் இன்று தொடர்ந்து இயங்கி வருகிறது.

ஜப்பானில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் அந்த மாணவியின் கல்வி ரயிலால் நின்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பயணிகள் ஏறாவிட்டாலும் இந்த ரெயிலை ஜப்பான் அரசு இயக்குகிறது. அதே நேரத்தில் அந்த மாணவி வருகிற மார்ச் மாதம் பள்ளி படிப்பை முடித்தவுடன் அப்பகுதியில் அந்த ரெயில் போக்குவரத்து நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Today News: Japan Keeps This Defunct Train Station Running for Just One Passenger

Leave a Reply