shadow

ஜப்பானில் பயங்கர வெள்ளம்: 25 பேர் பலி

ஒருபக்கம் மழையின்றி வயல்கள் வறண்டு இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் உயிர்கள் பலியாகி வரும் அவலம் ஏற்பட்டு கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் உள்ள தெற்கு பகுதியில் வரலாறு காணாத மழை காரணமாக அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த வெள்ளம் காரணமாக பல இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு அரசு கட்டிடங்கள் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தெற்கு ஜப்பானின் கைசு தீவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் ஷின்கோ அபே இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் அரசு விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைத்து கொடுக்கும் என பிரதமர் ஷின்கோ அபே உறுதியளித்தார்.

Leave a Reply