ஜப்பான் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 முதியவர்கள் பரிதாப பலி

ஜப்பான் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 முதியவர்கள் பரிதாப பலி

ஜப்பான் நாட்டில் உள்ள சப்போரோ என்ற பகுதியில் முதியவர்களுக்கு உதவும் வகையில் குறைந்த கட்டணத்தில் தங்குமிடம் தங்குமிடம் ஒன்றை தனியார் சமூக ஆர்வல நிறுவனம் ஒன்று நட்த்தி வருகிறது. மூன்று மாடிகள் கொண்ட இந்த இல்லத்தில் 16 முதியோர்கள் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இந்த இல்லத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் விடுதி நிர்வாகிகள் உடனடியாக அங்கிருந்த முதியோர்களை வெளியேறினர். இருப்பினும் தீ மிக வேகமக பரவியதால் அனைவரையும் விடுதி நிர்வாகிகளால் காப்பாற்ற முடியவில்லை. இந்த தீயில் சிக்கிய 11 முதியவர்கள் பரிதாபமாக உடல் கருகி மரணம் அடைந்தனர்.

இந்த தீ விபத்தில் இல்லம் முழுவதும் சேதம் அடைந்துவிட்டது பலியானவர்களில். 8 ஆண்கள், 3 பெண்கள் என்றும் 5 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பியதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply