ஜப்பானில் ‘மாநாடு’ படத்தை கொண்டாடும் ரசிகை !]

சிம்புவின் ‘மாநாடு’ படத்தை ஜப்பானியர்கள் கொண்டாடி வருவது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வசூலில் சாதனை செய்துவருகிறது.

இந்த நிலையில் ‘மாநாடு’, ஜப்பானிலும் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜப்பானில் உள்ள ரசிகை ஒருவர் ‘மாநாடு’ படத்தின் போஸ்டர் அருகே நின்று தனக்கு இந்த படம் மிகவும் பிடித்துள்ளதாக கூறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது