சென்னையில் நிருபர்களை சந்தித்தார் நடிகர் ஜெய். அப்போது ராஜா ராணி பட அனுபவம் பற்றி பகிர்ந்துகொண்டார்.

சுப்பிரமணியபுரம் படத்திற்குப் பிறகு நான் படங்களை தேர்ந்தெடுத்து நடித்திருக்கவேண்டும், தப்பு பண்ணிவிட்டேன். அதனால் ஒரு வருடமாக நடிக்கவில்லை. சிறிய இடைவெளிக்குப் பின் நடித்த படம்தான் ராஜா ராணி, இதையடுத்து வடகறி, நவீன சரஸ்வதி சபதம், திருமணம் எனும் நிக்கா ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறேன். தற்போது திருமணம் பற்றி யோசிக்க நேரமில்லை.

காதலித்த அனுபவம் உண்டா? என்று கேட்டதற்கு
நான் ஐஸ்வர்யா ராயின் ரசிகன். என் அறையில் அவருடைய படம்தான் இருந்தது. அவருக்குத் திருமணம் ஆனதும் அந்தப் படத்தைக் கூட தூக்கிப் போட்டுவிட்டேன். இப்போது என் அறையில் யாருடைய படமும் இல்லை. எனக்கு காதல் திருமணம்தான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் எனக்கு மனைவியாக வரப்போகிறவர் நடிகையா, நடிகை அல்லாதவரா என்பது தெரியவில்லை.

நிஜ வாழ்க்கையில் நான் எந்தப் பெண்ணையும் காதலித்து கழற்றி விடவில்லை. சில பெண்களின் காதலை நிராகரித்திருக்கிறேன். முன்பு என்னையும் அஞ்சலியையும் இணைத்து பேசினார்கள். அஞ்சலி எங்கே இருக்கிறார் என்பதே எனக்குத் தெரியாது என்றார் ஜெய்

Leave a Reply