விக்ரம் பிரபு நடித்திருக்கும் இவன் வேற மாதிரி படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 11ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
கும்கி படத்தில் அறிமுகமான விக்ரம் பிரபுவின் அடுத்தப் படம் இவன் வேற மாதிரி. எங்கேயும் எப்போதும் சரவணன் படத்தை இயக்கியிருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் யு டிவி மோஷன் பிக்சர்ஸுடன் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. சுரபி ஹீரோயினாக நடித்துள்ளார்.போஸ்ட் புரொடக்சன் வேலைகள் தற்போது நடந்து வரும் நிலையில் படத்தின் ட்ரெய்லரை வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளியிடுகின்றனர். உடனேயே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் இருக்கும் என யு டிவி தமிழக நிர்வாகி தனஞ்செயன் தெரிவித்துள்ளார். நவம்பரில் படம் திரைக்கு வருகிறது.

Leave a Reply
You must be logged in to post a comment.