பதவியேற்ற 10 மாதங்களில் ஆளுங்கட்சி எம்.பிக்களின் அதிருப்தி காரணமாக இத்தாலி பிரதமர் பதவியிழந்தார். இதை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஓட்டெடுப்பு நடந்தது.

இத்தாலியில் குடியரசு கட்சியை சேர்ந்த என்ரிகோ லெட்டா, கடந்த தேர்தலில் மாபெரும் பெற்று பத்து மாதங்களுக்கு முன் பதவியேற்றார். ஆனால் அவரது செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த ஆளுங்கட்சி எம்.பிக்கள் அவரை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்தனர். இதை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் தற்போதைய பிரதமர் என்ரிகோ லெட்டா தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மட்டேயா ரென்ஷி வெற்றி பெற்றார்.

பிரதமரின் தேர்வு ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்ததால், பிரதமர் என்ரிகோ பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் இன்று வழங்கினார். புதிய பிரதமராக மட்டேயா விரைவில் பதவியேற்பார் என தெரிகிறது.

Leave a Reply