இத்தாலி கடற்படை வீரர்கள் இருவர், இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக்கொன்ற வழக்கு, மரணதண்டனை வழக்கில் இருந்து வன்முறை வழக்காக மாற்ற மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி கேரள கடற்கரையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இரண்டு மீனவர்களை இத்தாலி கடற்படை வீரர்கள் மாசிமிலியனோ லாடோர், சால்வடோர் கிரோன் ஆகிய இருவர் சுட்டுக்கொன்றனர். இதனால் கேரளா மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்படதன் காரணமாக இத்தாலி கடற்படை வீரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை வழங்கப்படும் கொலை வழக்கு அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரையின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பு இந்த வழக்கின் பிரிவை மாற்றியுள்ளது. இதனால் இரு இத்தாலி வீரர்களும் மரண தண்டனையில் இருந்து தப்பித்து, அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் வன்முரை வழக்கு பிரிவுக்கு இன்று  மாற்றப்பட்டனர்.

Leave a Reply