நடிகை ராதிகாவுக்கு வருமானவரித்துறையினர் சம்மன்

நடிகை ராதிகாவுக்கு வருமானவரித்துறையினர் சம்மன்

பிரபல நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் சோதனை செய்த நிலையில் நேற்று அவரது மனைவியும், நடிகையுமான ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா அலுவலகத்தில் நேற்று சுமார் 11 மணி நேரம் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு ராதிகா நேரில் ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நடிகை ராதிகா இன்று நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply