ஐஸ்வர்யா தனுஷின் அடுத்த பட ஹீரோ யார்?
‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அடுத்த படத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக் ஏற்கனவே செய்திகள் வந்த நிலையில் தற்போது தனுஷ் பேட்டி ஒன்றில் இந்த செய்தியை உறுதி செய்துள்ளார்.
சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு தனுஷ் அளித்த பேட்டியில் ‘ஐஸ்வர்யாவின் அடுத்த படம் டிசம்பரில் தொடங்கலாம் என்றும் இந்த படம் பெண்களை மையப்படுத்தியதாக இருக்கும்’ என்றும் இந்த படத்தில் தான் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்
மேலும் மிக விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்றும் ஐஸ்வர்யாவின் முந்தைய இரண்டு படங்களை விட இந்த படம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.