சிகிச்சையில் திருப்தி இல்லை. நர்ஸை உயிருடன் எரித்து கொன்ற நோயாளி

சிகிச்சையில் திருப்தி இல்லை. நர்ஸை உயிருடன் எரித்து கொன்ற நோயாளி

இஸ்ரேல் நாட்டில் நோயாளி ஒருவர் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் திருப்தி இல்லாததால் ஆத்திரம் அடைந்து சிகிச்சை செய்த நர்ஸை உயிருடன் கொளுத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் தலைநகர் டெல்அவில் என்ற பகுதியில் உள்ள ஹோலோன் நகர சுகாதார மையம் ஒன்றி 70 வயது நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தோவா கராரோ (56) என்ற நர்சு உதவியாளராக இருந்தார். இந்நிலையில் நேற்று நோயாளிக்கு நர்சு தோவா கராரோ மருந்து மாத்திரை வழங்கி கொண்டிருந்த போது திடீரென எரியும் தன்மை கொண்ட ஒரு திரவத்தை நர்சு தோவா கராரோ மீது வீசிவிட்டு தப்பி ஓடி விட்டார்

இதனால் உடல் முழுவதும் தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட நர்ஸ் சிகிச்சை பயனின்றி சிறிது நேரத்தில் மரணம் அடைந்தார். இந்நிலையில் காவல்துறையினர் தப்பியோடிய நோயாளியை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

Leave a Reply