shadow

6 மாதங்களுக்கு ஒருமுறை நாடு மாறும் அழகிய குட்டித்தீவு

இருநாடுகளுக்கு இடையே ஒரு தீவு இருந்தால் அது யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு இடையே உள்ள ஒரு அழகிய குட்டித்தீவு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நாடு மாறும் முறை கடந்த 350 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளுக்கு இடையே ஓடும் பீடாகோ என்ற ஆற்றில் 200மீட்டர் நீளமும் 40 மீட்டர் அகலமும் கொண்ட தீவு ஒன்று உள்ளது. பிசான் தீவு என்று கூறப்படும் இந்த தீவு யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டபோது இதுகுறித்து கடந்த 1659ஆம் ஆண்டு சுமார் மூன்று மாதங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பிப்ரவரி 1 முதல் ஜூலை 31 வரை இத்தீவு ஸ்பெயின் அரசின் கீழ் இருக்கும் என்றும், ஆகஸ்ட் 1 முதல் ஜனவரி 31 வரை பிரான்ஸ் அரசின் கீழ் இருக்கும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி வரும் பிப்ரவரி 1ஆம் தேதி இந்த தீவு ஸ்பெயின் வசம் வரவுள்ளது.

Leave a Reply