shadow

100 பேர்களுக்கு மரணதண்டனை வழங்கிய ஐ.எஸ் நீதிபதி அடித்து கொலை

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த அமைப்பை கட்டுப்படுத்த ஈராக், சிரியா அரசுகள் எடுத்த நடவடிக்கை பயன் தரவில்லை. மேலும் இந்த அமைப்பினர் தனியாக ஒரு ராஜாங்கமே நடத்தி வருகிறார். ஐ.எஸ். அமைப்பினர்களிடம் பிடிபடும் ராணுவத்தினர் மற்றும் அப்பாவிகளுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் தனியாக ஒரு நீதிமன்றம் அமைத்து அதற்கென நீதிபதி அமைத்து மரண தண்டனை உள்பட பல்வேறு தண்டனைகள் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நீதிபதி அபு சயூப் என்பவர் சமீபத்தில் 100 பேர்களுக்கு மரண தண்டனை அளித்தார். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீர்ப்பை கொடுத்துவிட்டு அவர் ஈராக்கின் தெருக்களில் தனியாக சென்று கொண்டிருந்தபோது பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர். மேலும் கத்தியாலும் சரமாரியாக குத்தி, கொலை செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply