ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் கோவாவை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன்.

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் கோவாவை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன்.

islகடந்த சில நாட்களாக கால்பந்து ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்தியன் சூப்பர் லீக் கால்ந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை 3-2 என்ற கோல்கணக்கில் கோவா அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.

இன்று கோவாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதிய நிலையில் இந்த போட்டியில் இரு அணிகளும் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆனால் இரண்டாவது பாதியில் சாம்பியன் பட்டத்தை பெற இரு அணி வீரர்களின் ஆட்டத்திலும் அனல் பறந்தது.

இறுதியில் சென்னை அணி 3-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னை அணியின் உரிமையாளரும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சன் தனது அணி சாம்பியன் பட்டம் பெற்றது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

Leave a Reply