shadow

உயரமான கட்டிடத்தில் இருந்து தூக்கி வீசப்படும் குற்றவாளி. ஐ.எஸ்.ஐ.எஸ்., இயக்கத்தினரின் கொடூர தண்டனை

shadow

ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் தீவிரவாத இயக்கமாக செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., தனக்கென சட்ட திட்டங்களை வகுத்து கொண்டு தவறுகள் செய்பவர்களுக்கு கொடுமையான தண்டனைகள் கொடுத்து வருகின்றன. இந்த இயக்கத்தின் தண்டனை பெரும்பாலும் கழுத்தை அறுத்து கொலை செய்வதாகவே இருக்கும். இந்நிலையில் தற்போது கடந்த சில மாதங்களாக உயரமான கட்டிடத்தில் இருந்து குற்றவாளிகளை கீழே தள்ளிவிட்டு கொலை செய்யும் கொடூர தண்டனைகளை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஓரின செக்ஸ் தொடர்பு வைத்திருந்த ஒரு நபரை சமீபத்தில் கண்டுபிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர், அந்த குற்றவாளிக்கு உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே தள்ளிவிடும் தண்டனையை அளித்துள்ளனர். இதுகுறித்த அதிர்ச்சியான புகைப்படங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்., இணையதளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

உயரமான ஒரு கட்டிடத்தின் உச்சியில் இருந்து மூன்று ஐ.எஸ்.ஐ.எஸ்., இயக்கத்தினர் குற்றவாளியை தூக்கி மேலே இருந்து கீழே வீசி எறிகின்றனர். இந்த அதிர்ச்சி காட்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நேரில் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Leave a Reply