shadow

ஒரு வயது குழந்தையின் உடலில் வெடிகுண்டை கட்டி வெடிக்க செய்த தீவிரவாதிகள்

isisஈராக் மற்றும் சிரியா நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர், இதுவரை தங்களுக்கு எதிராக செயல்படும் ஆண்களை மட்டுமே பெரும்பாலும் கொலை செய்து வந்தனர். தற்போது ஒருபடி மேலே போய் பெண்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகளையும் கொலை செய்ய ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கு எதிராக செயல்பட்ட ஒருவரின் ஒரு வயதுக்கும் குறைவான குழந்தை ஒன்றை கடத்தி கொண்டு வந்த தீவிரவாதிகள், அந்த குழந்தையின் உடலில் வெடிகுண்டுகளை கட்டிவிட்டு தொலைவிலிருந்து ரிமோட் மூலம் அதை வெடிக்கச் செய்ததாக அதிர்ச்சி செய்தி ஒன்றை இராக் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் சாதிக் அல் ஹுசைனி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் அந்த பச்சிளங்குழந்தையின்  உடல் சிதறி பலியானதாகவும், இந்த கொடூர சம்பவம் பொதுமக்கள் முன்னிலையில் நடந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த கொடுஞ்செயலை உலகின் பல நாடுகளின் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

Leave a Reply