அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில் இருந்து யுவன் விலகலா?

அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில் இருந்து யுவன் விலகலா?

அஜித்தின் 58வது படமாக உருவாகவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் இருந்து யுவன் விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘விவேகம்’ படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கும் படம் ‘விசுவாசம்’. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த படத்தில் தனது வழக்கமான கூட்டணியை மாற்ற முடிவு செய்த இயக்குனர் சிவா, இசையமைப்பாளராக அனிருத்துக்கு பதிலாக யுவன்ஷ்ங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்தார். இருவரும் இணைந்து இந்த படத்திற்கு தேவையான டியூனையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்கள்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. சிவா – அஜித் கூட்டணியில் பணிபுரிந்து வரும் அனிருத் மீண்டும் இசையமைப்பாளராக வாய்ப்பிருப்பதாக திரையுலகினர் தெரிவித்தார்கள்.

Leave a Reply