மாஸ்டர் விழாவில் அடக்கி வாசித்த விஜய்? பயந்துட்டாரா?

மாஸ்டர் விழாவில் அடக்கி வாசித்த விஜய்? பயந்துட்டாரா?

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென வருமானவரித் துறையினர் அவரை படப்பிடிப்பு தளத்தில் இருந்து அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை செய்தனர் என்பதும் அவரது வீட்டில் இரண்டு நாட்கள் ரெய்டு நடந்தது என்பதும் தெரிந்ததே

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாஸ்டர் ஆடியோ விழாவில் விஜய் பரபரப்பாக பேசுவார் என அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் நேற்று நடைபெற்ற மாஸ்டர் ஆடியோ விழாவில் அவர் வருமான வரி ரெய்டு குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது அனைவருக்கும் ஏமாற்றமாக இருந்தது

மேலும் வருமான வரித்துறையினர் விஜய் ஒழுங்காக வரி கட்டுவதாக கூறி அந்த ரெய்டை முடித்துக் கொண்டாலும் விஜய் பயமுறுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அதனால் தான் மாஸ்டர் ஆடியோ விழாவில் அவர் இதுகுறித்து எதுவும் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆடியோ விழாவிலும் மத்திய மாநில அரசுகளை சீண்டிப் பார்க்கும் வகையில் விஜய் ஏதாவது பேசுவதும் அந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்துவது, வழக்கம் ஆனால் நேற்று நடந்த ஆடியோ விழாவில் அவர் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதனால் விஜய் பயமுறுத்தப்பட்டு இருப்பாரோ என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் கிளப்பி வருகின்றனர்

Leave a Reply