shadow

rajiniசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முதலாக விஜய் பட விழா ஒன்றில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள விஜய் 59′ படத்தின் தொடக்கவிழா ஜூன் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த படத்தின் தொடக்கவிழாவிற்கு கலைப்புலி எஸ்.தாணு அழைப்பின்பேரில் கலந்து கொள்ள ரஜினி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அவர் கண்டிப்பாக விஜய் படத்தில் கலந்து கொள்வார்  என்றும் கூறப்படுகிறது.

ரஜினியும், விஜய்யும் ஒரே நேரத்தில் ஒரே தயாரிப்பாளரின் படத்தில் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே எதையும் வித்தியாசமாக செய்ய நினைக்கும் தாணு, இருவரையும் இணைத்து ஒரே ஒரு காட்சியிலாவது இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படத்தில் நடிக்க வைத்துவிடவும் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே விஜய் 59′ படத்தில் அல்லது ரஜினி-ரஞ்சித் இணையும் படத்தில் ரஜினி-விஜய் இணைந்து நடிக்கும் காட்சி இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply