வரலட்சுமியை கடத்தியது யார்? டுவிட்டரில் பரபரப்பு

வரலட்சுமியை கடத்தியது யார்? டுவிட்டரில் பரபரப்பு

பிரபல நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமியை கடத்திவிட்டதாக டுவிட்டரில் புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது.

ஆனால் இந்த புகைப்படம் ஒரு படத்தின் புரமோஷனுக்காக எடுக்கப்பட்டதாகவும், அந்த படம் எது என்பது குறித்த தகவல் இன்று மாலை 6 மணிக்கு வெளிவரும் என்றும் வரலட்சுமி தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், தனக்கு பலர் போன் செய்து பாதுகாப்பை உறுதி செய்தது குறித்து நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வரலட்சுமி சமீபத்தில் பெண் திரையுலகினர்களின் பாதுகாப்புக்காக ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply