shadow

முதன்முதலாக ரஜினியுடன் ஜோடி சேர்வாரா த்ரிஷா?

trishaaகோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா கமல்ஹாசன் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துவிட்ட நிலையில் இன்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் மட்டும் இன்னும் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை

இந்நிலையில் ‘கபாலி படத்தை அடுத்து ரஞ்சித் இயக்கும் ரஜினி படத்தில் த்ரிஷா ஜோடியாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து த்ரிஷா தரப்பிடம் கேட்டபோது, ‘இந்த படத்தில் நான் நடிப்பேனா? இல்லையா? என்பது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்றும் இன்னும் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவில்லை என்றும் பொருத்திருந்து பாருங்கள் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply