shadow

‘தளபதி 61’ டைட்டில் ‘மூன்றுமுகம்? படக்குழுவினர் விளக்கம்

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரிரு தினங்களில் ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் ‘மூன்று முகம்’ என கடந்த சில நாட்களாக சமூக இணையதளங்களில் ஒரு போஸ்டர் பரவி வருகிறது. இந்த போஸ்டர் ‘தளபதி 61’ படத்தின் உண்மையான டைட்டில் போஸ்டர் என்றும் எப்படியோ லீக் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் ‘தளபதி 61’ படக்குழுவினர் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் முழுக்க முழுக்க ரசிகர் ஒருவரால் டிசைன் செய்யப்பட்டது என்றும், ‘மூன்று முகம்’ டைட்டில் எங்களுடைய பரிசீலனையில் உள்ள ஒரு டைட்டில் என்றும், ஆனால் இன்னும் டைட்டில் இறுதி செய்யப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

தளபதி 61′ படத்தின் உண்மையான டைட்டில் மிக விரைவில் வெளியாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை அட்லி வருகிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துவரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply