எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில் வழக்கு: தலைமைறைவானதாகவும் தகவல்

எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில் வழக்கு: தலைமைறைவானதாகவும் தகவல்

நகைச்சுவை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் சமீபத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தனது முகநூலில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்ததால், அவருக்கு பத்திரிகையாளர்கள் தங்களை எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் காவல்துறையினர்களிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். இந்த மனுவில் எஸ்,.வி சேகர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் எந்த நேரத்திலும் எஸ்.வி.சேகர் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் எஸ்.வி.சேகர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு முன் ஜாமீன் எடுக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

Leave a Reply