shadow

சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்திற்கு என்ன ஆச்சு?

பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் கடந்த சில நாட்களாக கோலிவுட் பிரபலங்களின் தூக்கத்தை கெடுத்தது. குறிப்பாக இந்த பக்கம் நேற்று விடிய விடிய பரபரப்பை ஏற்படுத்தியது.

தனுஷ், அனிருத், ஹன்சிகா, அனுயா, ஆண்ட்ரியா உள்பட பலரது அந்தரங்க படங்கள், வீடியோக்கள் ஆகியவை சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியதால் ஒவ்வொருவரும் தற்போது இதற்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்துவிட்டதாகவும், மேற்கண்ட அந்தரங்கங்கள் வெளியானதற்கு ஹேக்கர்களே காரணம் என்று ஒரு பக்கமும், சுசித்ரா மனநிலை சரியில்லாமல் இருப்பதாகவும் அதனால் தான் இந்த குழப்பம் என்று இன்னொரு பக்கமும் கூறப்பட்டு வருகிறது.;

மேலும் தனுஷ், அமலாபால், அனிருத், ஆண்ட்ரியா ஆகியோர்களின் ஆபாச வீடியோக்களை வரும் நாட்களில் வெளியிட உள்ளதாகவும் சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply