shadow

shruthi and deepikaகத்தி படத்தை அடுத்து விஜய் அடுத்து நடிக்க இருக்கும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்வதில் சிம்புதேவன் மிகவும் பிசியாக இருக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனே மற்றும் ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தீபிகா படுகோனே நடிப்பதால் தன்னுடைய கேரக்டர் டம்மியாக்கப்படும் என சந்தேகம் கொண்ட ஸ்ருதிஹாசன் முதலில் நடிக்க தயங்கியதாகவும், பின்னர் முழு ஸ்கிரிப்டை கேட்டபிறகு தன்னுடைய கேரக்டருக்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து விஜய்யுடன் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஸ்ருதிஹாசனின் கேரக்டர் மேலும் மெருகேற்ற இயக்குனர் முடிவெடுத்து இருப்பதால் தீபிகா படுகோனே அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஸ்ருதிஹாசனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட விஜய், ஸ்ருதிஹாசன் கண்டிப்பாக அந்த கேரக்டரில் நடிக்கவேண்டும் என்று கூறியதால் அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. தீபிகா படுகோனே மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் முதன்முதலில் ஒரே படத்தில் நடிக்க இருப்பதால் படத்தில் கவர்ச்சி போட்டி இருக்கும் என  தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் ஸ்ரீதேவி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்., அனேகமாக விஜய்க்கு அம்மாவாக அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் “நான் ஈ” சுதீப் வில்லனாக நடிக்கின்றார் என்பது அனைவரும் தெரிந்ததே.

இந்த படத்தை விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கின்றார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply