shadow

சசிகலா ஆதரவில் செங்கோட்டையன் முதல்வரா? கூவத்தூரில் ஆலோசனை

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ள நிலையில் இந்த தீர்ப்பை அடுத்து சசிகலாவுக்கு பதிலாக முதலமைச்சர் யார் என்பது குறித்த ஆலோசனை கூவத்தூர் ரிசார்ட்டில் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் தனக்கு பதிலாக செங்கோட்டையனை முன்னிறுத்துவதே சரியானதாக இருக்கும் என்று சசிகலா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி என்பதோடு மட்டுமல்லாமல், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி என்ற இமேஜும் செங்கோட்டையனுக்கு உள்ளதால் அவரை அதிமுக தொண்டர்களும் அவரை ஏற்றுக் கொள்வார்கள் என்று சசிகலா நம்புவதாக கூறப்படுகிறது.

சசிகலா உடனடியாக சரண் அடைய வேண்டிய நிலை உள்ளதால் சரணுக்கு முன் அவர் செங்கோட்டையனை அடையாளம் காட்டிவிட்டு செல்வார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply