shadow

கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு டிராப்?

கமல்ஹாசன் தனது மகளுடன் முதல்முதலாக நடித்து வந்த ‘சபாஷ் நாயுடு’ படம் டிராப் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

‘சபாஷ் நாயுடு’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு ஆயத்தமான போது எதிர்பாராத வகையில் கமலுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து கமல்ஹாசன் சில மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதால் விசா கிடைப்பது உள்பட பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் அமெரிக்காவில் இந்த படத்தை தொடர முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது,.

மேலும் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் ஆகியோர்கள் பிசியாக இருப்பதால் மூவரின் கால்ஷீட்டையும் மீண்டும் ஒரே நேரத்தில் இணைப்பது கடினம் என்றும் கூறப்படுகிறது.

எனவே கமல்ஹாசன் ‘விஸ்வரூபம் 2’ படத்தை ரிலீஸ் செய்வதில் முதலில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply