shadow

‘ரெமோ’ டைட்டில் ‘ரெங்கநாதன் என்கிற மோகனா’ என மாற்றமா?

remo2பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ‘ரெமோ’ என்ற டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் புதியதாக ‘ரெங்கநாதன் என்கிற மோகனா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று மாலையில் இருந்தே ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.

ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் என்று படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் கூறியபோது, “‘ரெமோ’ படத்தின் டைட்டில் மாற்றப்படவில்லை. மாற்றும் ஐடியாவும் இல்லை. எனவே இந்த செய்தியை நம்ப வேண்டாம்’ என்று கூறியுள்ளது.

ஆனால் தமிழக அரசின் வரிவிலக்கிற்காக இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன்னர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னர் சூர்யாவின் ‘மாஸ்’ உள்பட பல படங்களின் டைட்டில் இதுபோல் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Leave a Reply