shadow

சேகர் ரெட்டியை அடுத்து ராம்மோகன் ராவ் கைதா?

வருமான வரித்துறையினர்களின் ரெய்டுக்கு பின்னர் சஸ்பெண்ட் ஆகியதோடு காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், விரைவில் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு ஆதரவான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்திலும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

20 சீனியர் ஐ.ஏ.ஸ் அதிகாரிகளை பின்னுத்தள்ளிவிட்டி ராம மோகன ராவ் எப்படி தலைமை செயலாளர் பதவியில் அமர்ந்தார் என்ற சர்ச்சையும் இப்போது வெடித்துள்ளதால் இதையும் தற்போது வருமான வரித்துறை கண்காணித்து வருகிறதாம்

தற்போது சேகர் ரெட்டி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.வருமான வரித்துறையின் பட்டியலில், இன்னும் பலர் இருப்பதால், விரைவில் ராம மோகன ராவ் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது

Leave a Reply