shadow

kaththi

விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வளர்ந்து வரும் ‘கத்தி’ திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை படமாக்க ரூ.1 கோடி செலவில் பிரமாண்டமான செட் போடப்பட்டு வருகிறது.

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இந்த சண்டைக்காட்சிகள் இருக்கவேண்டும் என முடிவு செய்த  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இந்த படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைகாட்சிகளை மிகவும் பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்துள்ளார். சண்டைப்பயிற்சிக்காக ஹாலிவுட்டில் இருந்து பயிற்சியாளர்கள் வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு பணியாற்றிய ஸ்டண்ட் மாஸ்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக முருகதாஸ் தரப்பினர்களிடம் இருந்து தகவல்கள் வருகின்றன.

இதனிடையே கத்தி படத்தின் தயாரிப்பாளர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்ற பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்படும் தகவலை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார். கத்தி படத்தின் தயாரிப்பாளர் பிரச்சனை குறித்து மிகவும் தீவிர ஆலோசனை செய்து வருவதாகவும், கூடியவிரைவில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் அவரது தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply