shadow

நீதிபதிகள் ஒரு முடிவோடுதான் வழக்கை விசாரிக்கின்றார்களா? ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் வேதனை

Jallikattuசமீபத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் . ஜல்லிக்கட்டு விளையாட்டை கம்ப்யூட்டரில் விளையாடலாமே? என்று கேள்வி கேட்டு அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்தனர். மாடுகளை துன்புறுத்தவில்லை என்பதற்குப் பல ஆதாரங்களை எடுத்துக்காட்டியும் நீதிபதிகள் அதை ஏற்காமல் விலங்குகள் நல வாரியம் கொடுத்துள்ள பழைய படங்களைப் பார்த்தே நீதிபதிகள் முடிவெடுப்பதால் ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன அலங்காநல்லூர் இளைஞர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், கடந்த ஜனவரி 7-ம் தேதி, காட்சிப்படுத்தும் பட்டியலில் இருந்து காளையை நீக்கி உத்தரவிட்டதும் மகிழ்ச்சியாக இருந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தற்போது மீண்டும் விலங்குகள் நல வாரியத்தின் வழக்கால் சோகமாகியுள்ளனர்.

இதுகுறித்து அலங்காநல்லூர் முன்னாள் சேர்மன் ரகுபதி கூறியபோது, ‘மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கண்டிப்பாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்துவிடும் என்று ஒவ்வொரு தடவையும் சொல்லிக்கொண்டிருந்தார். தமிழ் பண்பாடு, பாரம்பர்யத்தை அழிக்க ஒரு தரப்பு திட்டமிட்டுச் செயல்படுகிறது. இங்கு நாம் காளைகளை வீட்டில் ஒரு நபர் போலவும், கடவுளாகவும் வைத்துப் பாதுகாக்கிறோம் என்பதை நீதிபதிகள் எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள்” என்று கூறினார்.

Leave a Reply