பஞ்சாபை பழிதீர்த்து இறுதிப்போட்டியில் நுழையுமா சென்னை அணி.

DHONI32DSSDDT30052014ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து மோத தகுதி பெறும் போட்டியில் இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன.

இந்த ஐ.பி.எல் தொடரில் இரண்டு லீக் ஆட்டங்களிலும் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்த சென்னை அணி, இந்த போட்டியில் வென்று பழிதீர்க்குமா? என்பதே சென்னை ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சென்னை அணிக்கு மூன்றாவது முறையாக சாம்பியன் ஆகும் வாய்ப்பு இன்று வெற்றி பெற்றால் மட்டுமே கிடைக்கும் என்பதால் சென்னை அணியினர் மிகுந்த உத்வேகத்துடன் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் இந்த ஐ.பி.எல் தொடரில் லீக் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று லீக் ஆட்டங்களில் மட்டுமே தோல்வி அடைந்துள்ள பஞ்சாப் அணி, முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற மிகுந்த சிரத்தையுடன் விளையாடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பஞ்சாப் அணியில் ஷேவாக், மேக்ஸ்வெல், டேவிட் மில்லர் போன்ற நட்சத்திர வீரர்கள் நல்ல பார்முடன் விளையாடி வருகின்றனர். சென்னை அணியில் வெய்ன் சுமித், பாப் டு பிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, பிரன்டன் மெக்கல்லம், டோனி ஆகிய அதிரடி வீரர்கள் இருப்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Leave a Reply