shadow

இணையதள இணைப்பு, தொலைபேசி இணைப்பு, 250 சேனல்கள்: இவ்வளவும் ரூ.149க்கு!

ஆந்திர மாநில முதலமைச்சர் கடந்த பல ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சியில் தீவிரமாக உள்ள நிலையில் தற்போது அடித்தட்டு மக்களும் இணையதளத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளார்.

இதன்படி வெறும் ரூ.149க்கு இணைய தள இணைப்பு மட்டுமின்றி, தொலைபேசி இணைப்பு, மற்றும் 250 சேனல்களுடன் தொலைக்காட்சி இணைப்பையும் வழங்க உள்ளார். 15 எம்பிபிஎஸ் முதல் 100 எம்பிபிஎஸ் அதிவேக இணைப்பாக வழங்கப்பட உள்ளது. 250க்கும் மேலான தொலைக்காட்சி சேனல்களும், வாடகை இல்லாத தொலைபேசி இணைப்பும் வழங்கப்பட உள்ளது.

இந்த புதிய திட்டத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை விஜயவாடாவில் தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக இன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மோரி கிராமத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. தொடர்ந்து 55 கிராமங்களில் இத்திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வரும் 2019ம் ஆண்டிற்குள் மாநிலத்தில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு இத்திட்டம் பூரணமாக அமல்படுத்தப்படும். இதன் மூலம் மேலும், 4,000 அரசுப் பள்ளிகளுக்கு டிஜிட்டல் பள்ளிகள் நடத்தலாம். மேலும், 6000 ஆரம்ப சுகாதார மையங்களுக்கு டெலி மெடிசின் மூலம் மருந்துகளை வழங்கலாம். ஸ்மார்ட் நகரங்களுக்கு மொபைல் இணைப்பு சேவையை எளிமையாக்கலாம்.

Leave a Reply