shadow

மெரீனாவில் போராட்டம் நடத்த அனுமதியா? அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளா நிலையில் சமீபத்தில் இதுகுறித்து சென்னை ஐகோர்ட், தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் மேலும் கூறியதாவது: “மெரினாவில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம்தான் தடை விதித்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக அரசு ஆலோசித்து முடிவெடுக்கும். மெரினாவில் போராட்டம் நடத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்குமா என்பது குறித்து ஆய்வு செய்வோம்” என்று கூறினார்.

மேலும், “காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயத்தின் முடிவை தான், உச்சநீதிமன்றம் மத்திய அரசை செயல்படுத்த கூறியிருக்கிறது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கும். ஸ்கீம் என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை எனில் டிக்ஸனரியை பார்த்து மத்திய அரசு தெரிந்து கொள்ளட்டும். ஸ்கீம் என்பது மேலாண்மை வாரியம் தான் என உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *