‘கபாலி’, ‘தெறி’க்கு அடுத்த இடத்தை பிடித்த ‘இருமுகன்’

‘கபாலி’, ‘தெறி’க்கு அடுத்த இடத்தை பிடித்த ‘இருமுகன்’

iru-muganகடந்த வாரம் வெளியான விக்ரமின் ‘இருமுகன்’ படத்திற்கு பெரும்பாலான ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சனங்களையே தந்தன. ஆனால் விமர்சனங்களை முறியடித்து வசூலில் சக்கை போட்டு போட்டு வருகிறது ‘இருமுகன்.

இந்த ஆண்டில் கபாலி, தெறி படங்களுக்கு பின்னர் அதிக வசூல் செய்த படம் ‘இருமுகன்’ என்ற பெருமையை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படும் இந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூ.25 கோடி வசூலை தாண்டிவிட்டது. குறிப்பாக சென்னையில் ரூ.3.2 கோடியும், செங்கல்பட்டில் ரூ.6.5 கோடியும் இந்த படம் வசூல் செய்துள்ளது.

அதிகாரபூர்வமாக விநியோகிஸ்தர்கள் இந்த படத்தை ஹிட் என்று அறிவித்துள்ளதால் இந்த படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.

Leave a Reply