சென்னையில் ரூ.5 கோடி வசூலை நெருங்கிய ‘இருமுகன்’

சென்னையில் ரூ.5 கோடி வசூலை நெருங்கிய ‘இருமுகன்’

irumuganசீயான் விக்ரம் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான ‘இருமுகன்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று கபாலி, தெறி படங்களுக்கு பின் இந்த ஆண்டில் அதிக வசூல் பெற்ற படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த படம் சென்னையில் கடந்த வாரம் 21 திரையரங்க வளாகங்களில் 273 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.92,07,260 வசூல் செய்துள்ளதாகவும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் நிரம்பியிருந்ததாகவும் அதிகாரபூர்வ தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த படம் ரிலீஸ் தினத்தில் இருந்து நேற்று வரை அதாவது செப்டம்பர் 18 வரை சென்னையில் ரூ.4,67,15,920 வசூல் செய்துள்ளது. இந்த படத்திற்கு பின்னர் ஒருசில படங்கள் கடந்த வாரம் வெளியானபோதிலும் இந்த படத்தின் வசூல் எந்த விதத்திலும் பாதிக்காமல்
இரண்டாவது வாரமாக வெற்றி நடை போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply