19 பவுண்டரி, 3 சிக்சர். 160 ரன்கள் விளாசிய அயர்லாந்து வீரர்

19 பவுண்டரி, 3 சிக்சர். 160 ரன்கள் விளாசிய அயர்லாந்து வீரர்

irelandஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி தொடர் கடந்த 10ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வந்த நிலையில் இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் ஆகியுள்ளது. ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டது.

நேற்று நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாது அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. இதில் 160 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் ஜோய்ஸ் என்ற வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 253 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Leave a Reply