ரயில் டிக்கெட் ரத்து செய்ய ஆதார் கார்டு தேவை. மத்திய அரசின் அடுத்த அதிரடி

ரயில் டிக்கெட் ரத்து செய்ய ஆதார் கார்டு தேவை. மத்திய அரசின் அடுத்த அதிரடி

IRCTC_1191327fரூ.500, ரூ.1000 செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தவுடன் எந்த கருப்புப்பண முதலைகளும் பதட்டம் அடைந்ததாகவே தெரியவில்லை. ஏனெனில் நம் நாட்டில் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று மொத்தமாக ஒரு தொகைக்கு ரயில் டிக்கெட் புக் செய்ய வேண்டியது. பின்னர் ஒருசில நாட்கள் கழித்து அந்த டிக்கெட்டுக்களை ரத்து செய்துவிட்டு பணத்தை வாங்கி வெள்ளையாக்குவது என்ற டெக்னிக்

இந்த டெக்னிக்கை பலர் பயன்படுத்தியதால் ரயிலில் முன்பதிவு செய்வது வழக்கத்திற்கு மாறாக திடீரென கடந்த ஒரு வாரமாக அதிகரித்தது. இந்நிலையில் தற்போது சுதாரித்து கொண்ட மத்திய அரசு இனிமேல் அதிக தொகை கொண்ட முன்பதிவு டிக்கெட்டுகளை ரயில் கவுன்ட்டர்களில் ரத்து செய்ய ஆதார் அல்லது பான் அட்டையை காண்பிப்பது அவசியம் என அறிவித்துள்ளது. இதனால் கருப்பு பணத்தை வைத்து ரயில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,.

இதுகுறித்து தென்னக ரயில்வே இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: ”கவுன்ட்டர்கள் மூலம் அதிக தொகைக்கு முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை ரத்து செய்யும்போது, பயணிகள் தங்களுடைய பான் அட்டை அல்லது ஆதார் அட்டையை அங்குள்ள ரயில்வே ஊழியரிடம் காண்பிக்க வேண்டும்.

பின்னர், அங்குள்ள ரயில்வே ஊழியர் தரும் முன்பதிவை ரத்து செய்யும் படிவத்தை பூர்த்தி செய்து, அந்த படிவத்துடன் அவரவர் கையொப்பமிட்ட பான் அட்டை அல்லது ஆதார் அட்டை நகல், எந்தக் கணக்கில் தொகையை செலுத்த வேண்டும் என்ற வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றை தலைமை வர்த்தக மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்”

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply