பிளிப்கார்ட் பாணியில் இந்தியன் ரயில்வே: பயணிகள் மகிழ்ச்சி!

பிளிப்கார்ட் பாணிகளில் இந்தியன் ரயில்வே ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்

பிளிப்கார்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ’தற்போது பொருளை வாங்கிக் கொள்ளுங்கள் பின்னர் ஒரு மாதம் கழித்து பணம் செலுத்துங்கள்’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே

இந்த திட்டத்தின்படி ஒரு மாதத்துக்கு தேவையான பொருள்களை வாங்கி உபயோகம் செய்து விட்டு அதன் பின்னர் அடுத்த மாதம் பத்தாம் தேதிக்குள் பணம் செலுத்தினால் போதும்

இந்த முறையை தற்போது ஐஆர்சிடிசி என்னும் இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. பயணிகள் தங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்டு அதன் பின்னர் பயணம் செய்து முடித்து 14 நாட்களுக்கு பின்னர் பணம் செலுத்தினால் போதும் என்ற புதிய நடைமுறை அறிமுகம் செய்துள்ளது

ஐஆர்சிடிசி இணையதளத்தில் மூலம் டிக்கெட் புக் செய்யும்போது ‘பே லேட்டர்’ என்ற ஆப்ஷன் தற்போது தோன்றும். அந்த ஆப்ஷனை தேர்வு செய்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் இந்த வசதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த புதிய வசதியால் பயணிகள் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் பயணம் செய்துவிட்டு அதன் பின்னர் பணம் செலுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply