கடைசி ஓவரில் கதாநாயகன் ஆன கார்த்திக் யோகி!

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரில் கார்த்திக் யோகி மிக அபாரமாக வீசி கதாநாயகன் ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

186 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி, கடைசி ஓவரில் வெறும் நான்கு நாட்கள் மட்டும் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. கையில் 6 விக்கெட்டுகளும் இருந்தன

இதனால் பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்யப்பட்டதாகவே கருதப்பட்டது. ஆனால் கடைசி ஓவரை வீசிய கார்த்திக் யோகி மிக அபாரமாக வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ஒரே ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதனால் பஞ்சாப் அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது என்பதும் ராஜஸ்தான் சூப்பர் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி ஓவரை வீசி கதாநாயகனான கார்த்திக் யோகிக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது