ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை, ஐதராபாத் வெற்றி:

ஐபிஎல் கிரிக்கெட்: பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் அணிகள் எவை எவை?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய இரண்டு போட்டிகளில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் வெற்றி பெற்றுள்ளதால் கிட்டத்தட்ட அடுத்த சுற்றுக்கு செல்லும் அணிகள் முடிவாகியுள்ளது.

நேற்றைய முதல் ஆட்டத்தில் ஐதராபாத் அணி குஜராத்துடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் 19.2 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த நிலையில் 18.1 ஓவர்களில் ஐதராபாத் அணி வெற்றி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடி நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 173 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

தற்போதைய நிலையில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இன்று நடைபெறும் பஞ்சாப் மற்றும் புனே அணியின் போட்டியின் முடிவினை பொறுத்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் இரண்டு அணிகள் முடிவு செய்யபப்டும்.

Leave a Reply