பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் வர இருப்பதால் 7வது ஐ.பி.எல் போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என தெரிகிறது. இதேபோன்று 2 வது ஐ.பி.எல் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த நாட்டுக்கு மாற்றுவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனினும் இலங்கை, வங்காளதேசம் அல்லது அரபு நாடுகளில் மாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

மொத்தம் 59 ஆட்டங்கள் அடங்கிய ஐ.பி.எல் போட்டிகளில் அரையிறுதி, இறுதிபோட்டி போன்ற கடைசி சில போட்டிகளை மட்டும் இந்தியாவில் நடத்தப்படும் என்றும் மற்ற போட்டிகள் வெளிநாட்டில் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. பாராளுமன்ற தேதி அறிவித்த பின்னரே ஐ.பி.எல். அட்டவணையை வெளியிட ஐ.பி.எல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply